சில நேரங்களில் வேளைகளில் இருந்து தப்பிக்க நாம்(நான்) ஒவ்வொரு காரணம் தேடுகிறோம்...இது சரியாய் இல்லை அது சரியாய் இல்லை . எல்லாம் சரியாய் இருந்து இருந்த நான் அப்படி பண்ணி இருப்பேன்...இப்படி பண்ணி இருப்பேன்னு கத சொல்லுறது .
ஒரு வேலை எல்லாம் சரியாய் இருந்தா...எனக்கு மனசு சரி
இல்லைன்னு சொல்லிட வேண்டியது . எப்படி எல்லாம் யோசிக்கிறது இந்த மூளை (??!!) ...
ரொம்ப நேரம் யோசிச்சதுல ஒன்று புரிந்தது ... மனம் மட்டும் நல்லா இருந்த மலையும் நகர்த்தி விடலாம் என்று.
நம்ம மட்டும் மனசு வச்ச போதும் எந்த வேலையும் அசத்தி புடலாம் :)
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு "
முதல் விஷயம் மனச ஆரோக்கியமா வச்சுக்கனும்...எந்த சூழ்நிலையையும் நமக்கும் நன்மைக்கும் சாதகமா மாற்றி விடலாம்.
"மனமும் மனம் சார்ந்த இடமும் வீடு " - படித்ததில் பிடித்தது facebook
இந்த மாதிரி நான் கடந்து வர்ற எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்...இந்த நிமிடத்தின் உணர்வை இங்கே பகிர்ந்து ஆகி விட்டது. எண்ணங்களின் கோர்வையே வாழ்க்கை எனது பார்வையில்.
நல்ல மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் பெற இறைவனை வேண்டுவோம் :)
நன்றி ,
மயில்
நல்ல மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் பெற இறைவனை வேண்டுவோம் :)
நன்றி ,
மயில்