Tuesday, June 28, 2011

பூ பற்கள்

மரமே! என்ன இது இப்படி ஒரு சிரிப்பு

உன் பூ பற்கள் அத்தனையும் தெரிய

சூரியனை பார்த்து விட்டதால் வந்த வெட்க சிரிப்பா

வசந்த காலத்தை வரவேற்று குசலம் விசாரிக்கிறாயா

வாழ்நாளே வசந்த காலமாய்

நீ மொட்டுகளை கொண்டு நிற்கும்போது

பருவ பெண் போல் புன்சிரிப்பு

மலரும் பொது பூவையின் புன்னகை

மணக்கும் போது உன் மகிழ்சியை உணரலாம்

வாடும் போது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம்...

உதிரும் போது உதிர பந்தம் விடுவிக்கபடுகிறது .

நீ உதிராமல் உயிர் வாழ்ந்தால்!  பூலோகமே பூ பந்து ஆகிவிடும்

என்ன செய்ய ! இயற்கையின் நியதி இப்படிதான் எழுதப்பட்டு இருக்கிறது

நீ மடிந்து போய் மனிதனை வாழவைக்கிறாய்

காயாகி கனியாகி விதையாகி மரமாகி மழையாகி !

நன்றி,
மயில்

4 comments:

  1. அருமை.. மிரத்தின் நிழல் படம் அழகு சேர்க்கும்.

    ReplyDelete
  2. நன்றி அருண்கார்த்திக் !
    போட்டோ போட்டாச்சு :)

    ReplyDelete
  3. Marathin nilarpadam nilal padam alla ;-)

    ReplyDelete