Thursday, April 23, 2015

மகளுக்கு அம்மா தேடுது

வணக்கம்

மகளுக்கு அம்மா தேடுது
அம்மாவிற்கு மகளை தேடுது
அன்பு  அங்கும் இங்கும் அலை பாய்கிறது அலைபேசி மூலம்
உண்மை உலகத்தை எதிர்கொள் மகளே
முகசுளிப்புகளுக்கும், இல்லை என்ற பதிலும் பழகி கொள்
உரிமை குரல் உயர்த்தவும் உறுதி கொள்
கல்வி கற்று , கலைகள் பழகி , கதைகள் பல கேட்டு ,
ஒழுக்கம் உணர்ந்து,இயற்கை ரசித்து ,சிநேகம்  வளர்த்து
விளையாடி உணவு உண்டு இசை பாடி மகிழும் வேளையில்
அம்மா வருவேன்  வேலைமுடிந்து உன்னை அழைத்து செல்ல

நன்றி,
மயில்

Tuesday, August 26, 2014

மனம் ஒரு மகாசக்தி




மனம் ஒரு  மகாசக்தி...............!!! சரியாக பக்குவபடுத்த படுமாயின் !!!

சில நேரங்களில் வேளைகளில் இருந்து தப்பிக்க  நாம்(நான்) ஒவ்வொரு காரணம் தேடுகிறோம்...இது சரியாய் இல்லை  அது சரியாய்  இல்லை  . எல்லாம் சரியாய் இருந்து இருந்த நான் அப்படி பண்ணி இருப்பேன்...இப்படி பண்ணி இருப்பேன்னு கத சொல்லுறது .

ஒரு வேலை எல்லாம் சரியாய் இருந்தா...எனக்கு மனசு சரி
இல்லைன்னு   சொல்லிட வேண்டியது . எப்படி எல்லாம் யோசிக்கிறது இந்த மூளை (??!!) ...

ரொம்ப நேரம் யோசிச்சதுல ஒன்று புரிந்தது ... மனம் மட்டும் நல்லா  இருந்த மலையும் நகர்த்தி விடலாம் என்று. 

நம்ம மட்டும் மனசு வச்ச போதும்  எந்த வேலையும் அசத்தி புடலாம்  :)

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு "

முதல் விஷயம் மனச ஆரோக்கியமா வச்சுக்கனும்...எந்த சூழ்நிலையையும் நமக்கும் நன்மைக்கும்  சாதகமா மாற்றி விடலாம்.

"மனமும்  மனம்  சார்ந்த இடமும் வீடு " - படித்ததில் பிடித்தது  facebook 

இந்த மாதிரி நான் கடந்து வர்ற எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்...இந்த நிமிடத்தின் உணர்வை இங்கே பகிர்ந்து ஆகி விட்டது. எண்ணங்களின்  கோர்வையே வாழ்க்கை எனது பார்வையில்.

நல்ல மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் பெற இறைவனை வேண்டுவோம் :)


நன்றி ,

மயில் 












Monday, July 21, 2014

வணக்கம் வணக்கம்

வணக்கம் வணக்கம்

குட்டி பிளாஷ்பாக் என்னை பற்றி :)

நான் கடைசியா போஸ்ட் போட்டது 2012- இல்.  அப்போ நான் மனைவி மட்டும்தான் இப்ப அம்மா ங்ர பெருமையும்  பொறுமையும் சேர்ந்து வந்து இருக்கு :)

எங்கள் மகளின் பெயர் சஞ்ஜனா 1.5 வருடம் ஆகிறது .

இந்த இரண்டு வருடம் இந்தியா ல நல்ல மகிழ்ச்சியா  இருந்துட்டு எல்லாரோடும் மகிழ்சிய பகிர்ந்துடு இப்ப மகிழ்சிய (மணி...மணி)  இரட்டிப்பா ஆக்க சுவிஸ் வந்தாச்சு :) குடும்பத்துல ஒரு தலைக்கட்டு கூடி போச்சுல...பொறுப்பா சம்பாதிக்கனும்ல.... என்ன நான் சொல்லுறது ?? சரிதானா ?!!!!!

என் வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

தவறாமல் என் அனுபவங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்  .
காசு குடுத்து வாங்க முடியாததுல அனுபவமும் ஒன்று.

சரி...எல்லாரும் அனுபவத்த படிகோணும். அப்பறம் ராமசாமி விட்டு போச்சு....கந்தசாமி விட்டுபோச்சு -ன்னு  சொல்ல கூடாது :)

ஆரோக்கியமா இருங்க...ஆனந்தமா இருங்க .


நன்றி,
மயில் .

Monday, February 6, 2012

Flow with the Flow



ஒரு மனம் சோர்ந்த மாலை பொழுது .. என் மனதில் தோன்றியவை. சில நேரம் வாழ்க்கை மிக வெறுமையாக உள்ளது !

எதையோ தொலைத்து எதையோ தேடுகிறோம்... என்ன தேவை என்றே சில நேரம் தெளிவாக இருபதில்லை சிலருக்கு

வாழ்க்கை சுழற்சியில் தொலைத்து தேடியது கிடைத்தது எல்லாம் கால போக்கில் இடம் மாறுகின்றன !!!


ஒரு குட்டிகவிதை (கேள்வி ??) :)


"என் பூக்கள் காய்கள் கனிகள் இலைகள் கிளைகள் எல்லாம் மறித்துவிட்டன

என் வேர்கள் மட்டுமே மிச்சம்.....நான் மறிக்கவா ? அல்லது மறுபடியும் பிறக்கவா ?? "


இப்படி ஒரு கேள்வி தோன்றியது !! இந்த மாதிரி கேள்விகள் நமக்கு பிடிகாத விஷயங்கள் வாழ்க்கையில் அரங்கேற்றம் ஆகும் பொது தோன்றும். நான் மறுபடி பிறக்கவே விரும்புகிறேன். கடவுளிடம் அதற்கான வழிகளை கேட்டு விட்டு, ஒரு முடிவோடு மனதை நல்ல விஷயங்களில் திருப்ப முயன்றேன்.


பழைய புகைப்படங்களை பார்க்கலாம் என்று தோணவும் அதை நோக்கி மெல்ல நகர்ந்தேன். புகைப்படங்கள் பெரிதாக சந்தோசங்களை பதிவு செய்கின்றன, எனவே அது ஒரு நல்ல மன அதிர்வுக்கு (positive thoughts or vibration ) வழி வகுக்கும். என் படங்களை பற்றி என் எழுத்துக்கள்....!


நிழற்படங்கள் - நினைவுகளின் பதிவுகள்


என் நிஜங்களை சுமந்து கொண்டு நிற்கும் நிழல்


பின்னோக்கி பயணிக்க கால சக்கரம் அனுமதிபதில்லை


அதற்கவோ என்னவோ மனிதன் கண்டுபிடித்த ஒரு மாற்று மருந்து இந்த நிழற்படம்..



மாறிய பாதைகளை காணலாம்

மறந்த நண்பர்களை காணலாம்

மறைந்த பந்தங்களை காணலாம்


குப்புற படுத்ததில் இருந்து......பாவாடை தாவணிக்கு மாறியது வரை காணலாம்...

பள்ளி இறுதி நாட்கள் ... கல்லூரியின் மறக்க முடியாத ஆட்டங்கள் பாட்டங்கள்...

இன்னும் எத்தனையோ ..........


நாம் வாழ்ந்த வாழ்க்கையை அடுத்த சந்ததியினருக்கு நம்மால் விலக முடியாவிட்டாலும், இந்த நிழற்படங்கள் விவரிக்கும்

என்னை பொறுத்த வரை நம் வாழ்ந்த வாழ்க்கையில் இளைப்பாறிய சில இடங்கள் தான் இந்த நிழற்படங்கள்

மனம் சோர்த்த நிலையில் பழைய புகை படங்களை பார்க்கும் பொழுது அருகில் இல்லாத சொந்தங்களின் அன்பை உணர முடிகிறது ... எதையோ நமக்கு உணர்த்துகிறது ....

நிழற்படங்கள் பத்திர படுத்தப்பட வேண்டிய பொக்கிஷத்தில் ஒன்று


நம்மை சில நேரம் நமக்கு அடையலாம் காட்டுகிறது ...நாம் வாழ்ந்த தருணங்களை அந்த நொடி நேசிக்க மறந்து போயிருந்தாலும் இந்த நிழற்படம் மூலம் மீண்டும் நேசிக்கலாம் :)


நேசிக்க எவ்வளவோ இருக்கும் இந்த அற்புத உலகத்தில், சிறிய ஏமாற்றங்களை கடந்து போக பழகி கொள்ள வேண்டும் !!!


"Flow with the Flow"


நன்றி,

மயில்

Wednesday, January 25, 2012

Photos - Interlaken Zurich

Hello Everyone,

I have started with few photos shot at Interlaken , Switzerland. It was like half snowy and half greeny moutains. Perfect place to relax and ofcoure for bollywood shooting :)




Thanks,
Jeyanthi

Sunday, January 8, 2012

புத்தாண்டில் புது தொடக்கம்

ஓம் நமோ பகவதே சதசிவாய !!
கடவுளுக்கு நன்றி !!
கடந்த வருடத்திற்கு நன்றி !!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
இந்த வருடம் மட்டும் அல்லாது வரவிற்கும் வருடங்கள் அனைத்தும் நலமாக அமைய வாழ்த்துக்கள். 
புத்தாண்டு இந்த வருடம் புத்தர் கோவிலில். புது வித அனுபவம் !! இதுவர எனக்கு புத்தர் பத்தி தெரிஞ்சது ரெண்டு விஷயம் தான். அவருக்கு போதி மரத்துக்கு அடியில ஞானம் பொறந்துச்சு அப்பறம் ஆசை தான் துன்பத்துக்கு காரணம்னு புத்தர் சொல்லி இருக்கார்.  அப்பறம் யாரோ சொன்னது "மக்கள் ஆசை பட கூடாதுன்னு புத்தர் ஆசை பட்டார் " .
Buddhism என்றால் புத்தர வழிபடுரவங்க. ஆனால் அங்க போனதுக்கு அப்பறம் தெரிஞ்சாச்சு புத்திசம் இன்னும் எவ்ளவோ விஷயகள சொல்லுது . நல்லது எங்க இருந்தாலும் எடுத்துக்கிறது நமக்கு பிடிக்கும் :)
ஆர்ய தார - பெண் புத்தர்.  ஹிந்து வழிபாட்டில் உள்ளது போல பெண் தெய்வங்கள் உள்ளது எனக்கு தெரியாது விஷயம். தாயின் அருகாமை எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒரு அசாத்திய நம்பிக்கை .வழக்கம் போல எல்லா குழந்தைக்கும் உள்ளது போல அம்மாகிட்ட ஒரு ஈர்ப்பு :)

புத்த சாக்யமுனி - புத்தரின்பெயர் இவ்வாறு சொல்ல படுகிறது . இந்த பெயர பார்த்ததும் இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்னு தோனுச்சு . நான் இந்த book  "Modern buddhism "  படிக்க ஆரம்பிச்சுருக்கேன். படிச்சுட்டு என்னோட எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன் .

நன்றி
மயில்

Tuesday, June 28, 2011

பூ பற்கள்

மரமே! என்ன இது இப்படி ஒரு சிரிப்பு

உன் பூ பற்கள் அத்தனையும் தெரிய

சூரியனை பார்த்து விட்டதால் வந்த வெட்க சிரிப்பா

வசந்த காலத்தை வரவேற்று குசலம் விசாரிக்கிறாயா

வாழ்நாளே வசந்த காலமாய்

நீ மொட்டுகளை கொண்டு நிற்கும்போது

பருவ பெண் போல் புன்சிரிப்பு

மலரும் பொது பூவையின் புன்னகை

மணக்கும் போது உன் மகிழ்சியை உணரலாம்

வாடும் போது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம்...

உதிரும் போது உதிர பந்தம் விடுவிக்கபடுகிறது .

நீ உதிராமல் உயிர் வாழ்ந்தால்!  பூலோகமே பூ பந்து ஆகிவிடும்

என்ன செய்ய ! இயற்கையின் நியதி இப்படிதான் எழுதப்பட்டு இருக்கிறது

நீ மடிந்து போய் மனிதனை வாழவைக்கிறாய்

காயாகி கனியாகி விதையாகி மரமாகி மழையாகி !

நன்றி,
மயில்