Saturday, April 2, 2011

கலர் கலர் எண்ணங்கள்....!



குழந்தையாய் மாறி சில நிமிடம்

நான் வரைந்த பொம்மை

என்னால் உருவாக்கப்பட்ட படைப்பு

மனம் முழுவதும் அதில்தான் முடியும்வரை

மறந்தும் வேறு சிந்தனை வரவில்லை

எதையும் சாதிக்கவில்லை இந்த வரைபடத்தில்

சாதிக்க நான் ஓவியரும் இல்லை

ஆனால் என்னால் முடிந்தது என்ற பூரிப்பு

புதுவித ஹார்மோன் சுரந்தது

ஒவ்வொரு மனமும் இதுக்குதானே ஏங்குகிறது

முடியும் என்ற எண்ணம் தானே வெற்றியின் முதல் நிலை

பழமை விரும்பபடுகிறது

புதுமை தேடப்படுகிறது

ஒவ்வொரு நாளும் புதுமை

சூரியனோடு சேர்ந்து நாளும் பிறக்கிறது..! நாமும் பிறப்பதாய் உணர்வோம்

இதற்காவே குழந்தையாய் தினம் சில நிமிடம் செலவழிக்க வேண்டும் - ஏனென்றால் ?

கற்பனைக்கு எல்லை இல்லை

இது முடியும் இது முடியாது என்று தெரியாது

முயன்று பார்க்க மட்டுமே தெரியும்

கலர் கலர் வண்ணங்கள் போல் ர் ர் ண்ங்ள்
ஒவ்வொன்றும் ஒரு புதையல் !

குறிப்பு :

சின்ன விஷயத்த பெருசா சொல்லி இருக்கேனா ?

// சிறு துளி பெருவெள்ளம் //

சின்ன சின்ன சந்தோசங்கள் சேர்த்து வைப்போமே

சந்தோச வெள்ளத்தில் மிதப்போமே !

சிறு சேமிப்பு விளம்பரம் மாதிரின்னு வச்சுகோங்க :)

நன்றி,
மயில்


6 comments:

  1. Wonderful and inspirational!!

    ReplyDelete
  2. சிறு சேமிப்பு விளம்பரம் மாதிரின்னு வச்சுகோங்க :) நல்லா இருக்கே..
    சின்னச்சின்ன சந்தோசம் சேத்துவைப்போம்..

    ReplyDelete
  3. வார்ட் வெரிஃபிகேசன் எடுத்துவிடுங்களேன். ப்ளீஸ்

    ReplyDelete
  4. நன்றி முத்துலட்சுமி மேடம் !

    ReplyDelete
  5. வார்ட் வெரிஃபிகேசன் Remove பண்ணிட்டேன் மேடம் ! :)

    ReplyDelete