Saturday, April 2, 2011

வெட்கமே ஒரு வானவில்லாய் !



நீ துயில் எழுந்தால் அது எங்கள் விடியல் !

தங்க முகமாய் சூரியன்

பசுமலை யாம் உடல்

சருகை சேலையாக ஒளி கதிர்கள்

வெள்ளி கொலுசாய் சல சலக்கும் நதிகள்


கார்மேகமாய் உன் கூந்தல் - அதில்

மாலையில் நீ சூடும் மல்லிகைதான் நிலா

நட்சத்திரங்களால் உன் சிகை அலங்காரம்

நீ ஓடி விளையாடவே ஒன்பது கோள்கள்


சுவாசமே இளந்தென்றல்

நீ மாற்றும் உடைதான் பருவ காலங்கள்

பாசமாய் உன் மழை நேசமாய் உன் சாரல்

வெட்கமே ஒரு வானவில்லாய் !

நன்றி,
மயில்

4 comments:

  1. Recommend you to post this in Aanandha Vikadan :)

    ReplyDelete
  2. nicely written. :-)


    Thank you for visiting my blog. நல்லா எழுதுறீங்க.... Follow பண்றேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி சித்ரா !
    என்னையும் நல்ல எழுதுறேன்னு சொன்னதுக்கு :)
    (நானும் ரவுடி தான் யா !!! இந்த ஸ்டைல் ல )
    நானும் நல்ல எழுதுவேன் !! நான் blog start பண்ணி எழுதறேன் எழுதறேன் !

    ReplyDelete