Wednesday, April 13, 2011

கனா கண்டேன்....!!!




நமக்குள் இருக்கும் ஒரு மாய உலகம்

கண்ணனுக்கு பின்னால் மூளைக்கு முன்னால்

கண்களை மூடினால் மட்டுமே காட்சிகள் தெரியும்

எதுவும் சாத்தியம் இந்த உலகத்தில்


உணர்சிகளால் உருவாக்க பட்ட உயிர் பொம்மைகளின் ஆட்சி

நிஜங்களை சுமந்து கொண்டு  கனவு  பொம்மைகள்

உணர மட்டும் முடிந்த உரையாடல்கள்

மனிதனும் மாயாவி ஆகலாம் சாகசங்கள் பல புரியலாம்


தூக்கம் - கடவுளின் வரப்ரசாதம்

வாழும்போது மனிதனுக்கு வழங்கப்பட்ட சொர்க்கம்

கனவு - தூக்கத்தின் ஒரு பார்வை

ஒரு வேலை இந்த மாயஉலகம் தான் சொர்கமோ ?


முழுவதும் காட்ட படாத புது பட காட்சிகள் போல்

சிறு சிறு கனவுகளால் கடவுள் சொர்க்கத்தை காண்பிகிறாரோ !

தூக்கத்தில் குழந்தையின் சிரிப்பு - பாப்பா சாமி கூட பேசுது

ஒரு வேளை கடவுள் அந்த மாயா லோகத்துல இருக்காறோ?


என்னவோ ! தூங்கி எழுந்ததும் தோனியதை எழுதிவிட்டேன்

யோசிக்கவேண்டியது உங்க பொறுப்பு !

நன்றி,
மயில்

6 comments:

  1. தூக்கத்தில் குழந்தையின் சிரிப்பு - பாப்பா சாமி கூட பேசுது

    ஒரு வேலை கடவுள் அந்த மாயா லோகத்துல இருக்காறோ?


    .....ஒரு வேளை .....

    ......எங்கும் எதிலும் இருப்பவர், குழந்தைகளின் மனதிலும் இருப்பது சிறப்பே. :-)

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி :)
    தூங்கி கிட்டே எழுதிட்டேன்
    சரி பண்ணிட்டேன் .
    நன்றி சித்ரா அக்கா

    ReplyDelete
  3. முழுவதும் காட்ட படாத புது பட காட்சிகள் போல்...
    சிறு சிறு கனவுகளால் கடவுள் சொர்க்கத்தை காண்பிகிறாரோ !


    உண்மையிலேயே நல்ல கற்பனை.

    வாழ்துகள்.

    ReplyDelete
  4. "எதுவும் சாத்தியம் இந்த உலகத்தில்" -உண்மை

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  5. நன்றி குணசேகரன் :)
    Thanks for visiting my blog

    ReplyDelete