Tuesday, June 28, 2011

பூ பற்கள்

மரமே! என்ன இது இப்படி ஒரு சிரிப்பு

உன் பூ பற்கள் அத்தனையும் தெரிய

சூரியனை பார்த்து விட்டதால் வந்த வெட்க சிரிப்பா

வசந்த காலத்தை வரவேற்று குசலம் விசாரிக்கிறாயா

வாழ்நாளே வசந்த காலமாய்

நீ மொட்டுகளை கொண்டு நிற்கும்போது

பருவ பெண் போல் புன்சிரிப்பு

மலரும் பொது பூவையின் புன்னகை

மணக்கும் போது உன் மகிழ்சியை உணரலாம்

வாடும் போது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம்...

உதிரும் போது உதிர பந்தம் விடுவிக்கபடுகிறது .

நீ உதிராமல் உயிர் வாழ்ந்தால்!  பூலோகமே பூ பந்து ஆகிவிடும்

என்ன செய்ய ! இயற்கையின் நியதி இப்படிதான் எழுதப்பட்டு இருக்கிறது

நீ மடிந்து போய் மனிதனை வாழவைக்கிறாய்

காயாகி கனியாகி விதையாகி மரமாகி மழையாகி !

நன்றி,
மயில்

Monday, May 16, 2011

நெஞ்சுல உன்ன சுமந்து....




நெஞ்சுல உன்ன சுமந்து...

நிதம் நிதம் பொறந்துகிட்டு இருக்கேன்

என் வாழ் நாள கூட்ட இல்ல நீ குடிஇருக்க நித்தம் ஒரு புது வீடு !


மனசுல உன்ன நெனச்சு நெனச்சு மயங்கி தான் போறேன்

ஒரு மறு பார்வை நீ பார்த்த உலகம் மறந்து தான் போறேன் !

கண்ணுல என்ன காந்தமா வச்சு இருக்க ?


ஒரு மைல் தூரம்மினாலும் உன் குரல் கேட்ட ஓடி வருவேனய்யா

ரயிலு வண்டி வேகமா ? இல்ல இந்த ராசாத்தி வேகமா ?

புதிர் போட்டு கேட்குது இந்த ஊரு சனம் எல்லாம் !


காடு கரை சுத்தி திரிஞ்சு...

மானம் மஞ்ச தேஞ்சு குளிக்கிற வேளையில

மயங்கி நீ மடி வந்து சேரும் போது

பிள்ளையாய் நீ தாயாய் நான்! உலகம் நம்ம வீட்டுக்குள்ளதான்!


நன்றி,
மயில்


குறிப்பு : இதை எழுதும் போது என் மனதில் வந்து தங்கி போன மேரி அக்காவுக்கு நன்றி. சின்ன வயசுல நான் பார்த்த கிராமத்து தேவதை. கருப்ப இருந்தாலும் கலையா இருப்பாங்களா ! அப்படி தான் மேரி அக்கா. அழகா இருப்பாங்க ! கருப்பு ஐஸ்வர்யாராய் :)

படம் : இளையராஜா ஆயில் painting . இந்த link பாருங்க https://picasaweb.google.com/artistilayaraja . இளையராஜா - னு பெயர் வச்சாலே இப்படி கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வைப்பாங்க போல. இந்த படங்கள் என்னை ரொம்ப கவர்ந்தவை.


Wednesday, April 13, 2011

கனா கண்டேன்....!!!




நமக்குள் இருக்கும் ஒரு மாய உலகம்

கண்ணனுக்கு பின்னால் மூளைக்கு முன்னால்

கண்களை மூடினால் மட்டுமே காட்சிகள் தெரியும்

எதுவும் சாத்தியம் இந்த உலகத்தில்


உணர்சிகளால் உருவாக்க பட்ட உயிர் பொம்மைகளின் ஆட்சி

நிஜங்களை சுமந்து கொண்டு  கனவு  பொம்மைகள்

உணர மட்டும் முடிந்த உரையாடல்கள்

மனிதனும் மாயாவி ஆகலாம் சாகசங்கள் பல புரியலாம்


தூக்கம் - கடவுளின் வரப்ரசாதம்

வாழும்போது மனிதனுக்கு வழங்கப்பட்ட சொர்க்கம்

கனவு - தூக்கத்தின் ஒரு பார்வை

ஒரு வேலை இந்த மாயஉலகம் தான் சொர்கமோ ?


முழுவதும் காட்ட படாத புது பட காட்சிகள் போல்

சிறு சிறு கனவுகளால் கடவுள் சொர்க்கத்தை காண்பிகிறாரோ !

தூக்கத்தில் குழந்தையின் சிரிப்பு - பாப்பா சாமி கூட பேசுது

ஒரு வேளை கடவுள் அந்த மாயா லோகத்துல இருக்காறோ?


என்னவோ ! தூங்கி எழுந்ததும் தோனியதை எழுதிவிட்டேன்

யோசிக்கவேண்டியது உங்க பொறுப்பு !

நன்றி,
மயில்

Saturday, April 2, 2011

வெட்கமே ஒரு வானவில்லாய் !



நீ துயில் எழுந்தால் அது எங்கள் விடியல் !

தங்க முகமாய் சூரியன்

பசுமலை யாம் உடல்

சருகை சேலையாக ஒளி கதிர்கள்

வெள்ளி கொலுசாய் சல சலக்கும் நதிகள்


கார்மேகமாய் உன் கூந்தல் - அதில்

மாலையில் நீ சூடும் மல்லிகைதான் நிலா

நட்சத்திரங்களால் உன் சிகை அலங்காரம்

நீ ஓடி விளையாடவே ஒன்பது கோள்கள்


சுவாசமே இளந்தென்றல்

நீ மாற்றும் உடைதான் பருவ காலங்கள்

பாசமாய் உன் மழை நேசமாய் உன் சாரல்

வெட்கமே ஒரு வானவில்லாய் !

நன்றி,
மயில்

கலர் கலர் எண்ணங்கள்....!



குழந்தையாய் மாறி சில நிமிடம்

நான் வரைந்த பொம்மை

என்னால் உருவாக்கப்பட்ட படைப்பு

மனம் முழுவதும் அதில்தான் முடியும்வரை

மறந்தும் வேறு சிந்தனை வரவில்லை

எதையும் சாதிக்கவில்லை இந்த வரைபடத்தில்

சாதிக்க நான் ஓவியரும் இல்லை

ஆனால் என்னால் முடிந்தது என்ற பூரிப்பு

புதுவித ஹார்மோன் சுரந்தது

ஒவ்வொரு மனமும் இதுக்குதானே ஏங்குகிறது

முடியும் என்ற எண்ணம் தானே வெற்றியின் முதல் நிலை

பழமை விரும்பபடுகிறது

புதுமை தேடப்படுகிறது

ஒவ்வொரு நாளும் புதுமை

சூரியனோடு சேர்ந்து நாளும் பிறக்கிறது..! நாமும் பிறப்பதாய் உணர்வோம்

இதற்காவே குழந்தையாய் தினம் சில நிமிடம் செலவழிக்க வேண்டும் - ஏனென்றால் ?

கற்பனைக்கு எல்லை இல்லை

இது முடியும் இது முடியாது என்று தெரியாது

முயன்று பார்க்க மட்டுமே தெரியும்

கலர் கலர் வண்ணங்கள் போல் ர் ர் ண்ங்ள்
ஒவ்வொன்றும் ஒரு புதையல் !

குறிப்பு :

சின்ன விஷயத்த பெருசா சொல்லி இருக்கேனா ?

// சிறு துளி பெருவெள்ளம் //

சின்ன சின்ன சந்தோசங்கள் சேர்த்து வைப்போமே

சந்தோச வெள்ளத்தில் மிதப்போமே !

சிறு சேமிப்பு விளம்பரம் மாதிரின்னு வச்சுகோங்க :)

நன்றி,
மயில்


Monday, March 28, 2011

ஒரு மாலை ரயில் பயணம்...!

தனிமை சில நேரம் நமக்கு வாழ்க்கை பாடம் கற்று தருகிறது

என்னனோடு நான் மட்டும் என்னை பார்கிறேன்

நானும் என் நினைவுகளும் பேசி கொண்டோம்

நடந்து வந்த பாதைகள், கடந்து சென்ற மனிதர்கள்...!

சில நிகழ்வுகள் நெஞ்சில் நிழலாய் தொடருகின்றன !

சில நிகழ்வுகள் மனத்திரையில் தினம் 3 வேளையும் திரை இட படுகிறது சினிமா போல

5 வருடத்திற்கு முன் நான் இப்படி இல்லை. எனக்குள் பல நல்ல மாற்றம் சில தேவை இல்லாத மாற்றங்களும் தான்

சில விஷயங்களை ஏத்துக்க முடியாது, கோவம் வரும் ! குறைகள் பெருசா தெரியும்! இப்ப கொஞ்சம் நல்ல மாற்றம் இருக்கு. மற்றவர்களை அப்படியே ஏத்துக்குறேன். நல்லது மட்டும் தான் கணக்குல எடுத்துக்குறேன்

யாரும் யாருக்காகவும் மாற முடியாது, மாறவும் தேவை இல்ல ! 
எல்லோருக்கும் ஒரு நியாய புத்தகம் இருக்கு. அதுல அவங்களுக்குனு ஒரு முன்னுரை இருக்கு ஒரு தெளிவுரையும் இருக்கு

ஒன்று புரிந்தது எனக்கு, அனுபவங்கள் நம்மை பக்குவ படுத்துகின்றன

யாரையும் நல்லவங்க ? கெட்டவங்க - னு பிரிக்க முடியாது

எல்லாரும் நல்ல வங்க தான். சூழ்நிலைகள் தான் ஒருவனின் சுய ரூபத்தை அவனுக்கே உணர்த்துகிறது

உடல் வளர்ச்சி ஒரு வயதில் முழுமை அடைகிறது. ஆனால்,
நம் அனுபவங்காளால் நம் எண்ணங்களால் மனதளவில் ஒவ்வொரு நாளும் வளர்கிறோம்

ஒரே தத்துவமா இருக்கா ? கொஞ்சம் நேரம் train ல தனிய உட்கார்ந்து யோசித்ததின் விளைவு :)
இந்த மாதிரி உங்களுக்கும் அனுபவம் ஏற்பட்டு இருக்கும். நான் அதை பதிவு பண்ணி இருக்கேன். அவ்ளோதான்.....!
 
நன்றி,
மயில்




Friday, March 25, 2011

என் அருகில் எப்போதும் போல் நீங்கள் !!!!

அப்பா அம்மா ,
எனக்கு உயிர் கொடுத்து உடல் கொடுத்து உலகம் கற்று கொடுத்து

தந்தையாய் தோழனாய் ஆசானாய் என்னை வழிநடத்தி

அன்பும் கல்வியும் தான் அழியாத சொத்து என்று வலியுறுத்தி

வறுமை நம்மை வாட்டிய போதிலும், வளம் குறையாமல் என்னை வளர்த்து

இதுதான் வாழ்க்கை என்று அடையாளம் காட்டினீர்கள்

பாதி வழியில் பாதை மறந்து நின்றேன்

குஞ்சுகள் பெருசானதும் கோழி விலகுவது போல

என்னை விட்டு சென்று விட்டீர்களா ?

என்ன நடந்தாலும் ஓடி வந்து உங்களிடம் சொல்லும் நான்
 
இன்றும் சொல்லி கொண்டு தான் இருக்கேன்.........!

என் அருகில் எப்போதும் போல் நீங்கள் !

நன்றி,
மயில்


Saturday, February 19, 2011

கண்கள்

முதல் பார்வையில் தொலைத்தேன் என்னை
ஆயிரம் பேசின உன் கண்கள் !
பார்த்து கொண்டு இருந்தன உன் இதழ்கள் !
ஓ! காதலில் மட்டும் கடவுளின் படைப்பு மாறுபட்டு வேலை செய்கிறதோ !

நன்றி,
மயில்

Friday, February 18, 2011

இறைவன் - என்னை தொலைத்து உன்னை தேடுகின்றேன்


எனக்குள் நீ

நான் இல்லாத நான் நீ

அன்பே உருவம் அடக்கமே ஆபரணம்

எண்ணத்தில் நன்மை சொல்லில் மேன்மை

சொர்கத்திற்கு அருகாமை

தேடுகின்றேன் உன்னை !

தொலைக்க வேண்டும் என்னை (நான்)

நன்றி,
மயில்



வணக்கம்

வணக்கம்,
இது என்னுடைய முதல் பதிவு. ஆனைமுகனை வணங்கி தொடங்குகிறேன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா!
 
நான் இந்த Blog ஆரம்பிதத்தின் நோக்கம் என்னுடைய வாழ்க்கை பயணத்தில் சில தருணங்களை இங்கே செலவிட விருப்பம். எழுத்துகளாக என் எண்ணங்களை மாற்ற ஒரு முயற்சி . நான் கற்றது, கேட்டது, படித்தது மற்றும் என் நினைவுகள், உணர்வுகளின் வெளிபாடு தான் இந்த பதிவு.
 
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து என் முதல் பதிப்பை முடிக்கின்றேன்.

நன்றி!

அன்பே சிவம்.